உலகமே இப்போ
![](https://eluthu.com/images/loading.gif)
காலை வந்து போகிறது
மாலை வந்து போகிறது
கடவுள் தந்த வாழ்க்கையில்
மரணமே முடிவைசொல்கிறது
தினசரி பத்திரிகையில
திடிக்கிடும் செய்திகிடக்கிறது
திருப்பி திருப்பி பார்க்கையில
மனமே தீயால் எரிகிறது
கள்ளக்காதலன் ஒரு வீட்டில்
ஆசை நாயகியுடன் படுத்திருக்க
மாமியார் கொடுமையால் மறுவீட்டில்
மருமகள் உடம்பு எரிகிறது
பெற்ற அப்பனே பாவம் பாராது
பெண்பிள்ளையை கற்பழிக்கிறான்
கற்பிலிருக்கும் குழந்தையை
கருணையே இல்லாது தாயே
தன் கையால் விசம்கொடுக்கிறாள்
உலகம் அழியும் காலம்
இப்போ தொலைவில் இல்லை
உலகம் இங்கு தீமையால் நிறைய
கடவுள் எப்பொழுதும் பொறுத்திருப்பதுமில்லை