எல்லாம் கடந்து போகும் ...!!!
எப்படியோ என்னை ....!!!
எதேட்சையாக பார்த்தாய் ...
எப்படி பட்டாய் என் கண்ணில் ...
எதற்காக பட்டாய் என் கண்ணில் ...
எப்பொழுதும் உன் சிந்தனையில் ...
என் இதயம் ஏங்குகிறது
எளிமையான என் கண்ணாடி இதயத்தில் ...
எறிந்த உன் கண் கல்லால் ...
எட்டு துண்டுகளாக உடைந்தது இதயம் ....
என்னவளில் கண்களும் ...
எமனின் பாசக்கயிறுதான்...
எத்தனை நினைவுகளுடன் வாழ்ந்த ...
என்னை ஏனடி ...? பார்த்தாய் ...?
எதற்காக என்னை கொல்கிறாய்...?
எண்ணங்கள் நிறைவேறும் வரை
எனக்காக காத்திரு கண்ணே
எத்தனை ஜென்மம் ஆனாலும்
என்னவள் நீதானடி ...!!!
எதிர்ப்புகள் பல வரும்
எதிர் கொள்ள தயாராக இரு ...
எதிர் சாதி நான் உனக்கு ...!!!
எல்லாவிதத்திலும் ......!!!
என் சாதி நீயில்லை ...
என் மதம் நீயில்லை ...
என்னதான் வேறுபட்டாலும்
என் இதயம் என்றும் நீதானடி ....!!!
எத்தனையோ காதல் தோற்றதற்கு
என் சாதி உன் சாதிதான் காரணம் ...
எனக்காக நீயும் உனக்காக நானும் ..
எதையும் தாங்கிக்கொள்வோம்
எங்கள் காதல் நிறைவேறும் வரை ...
எல்லாம் கடந்து போகுமென நம்புவோம் ...!!!