குடைக்குள் கணபதி

பாசி படர்ந்தக் குளம்
பார்த்து நடக்கும் பெண்கள் தினம்
கலங்காத நீரெடுக்க
இளங்காலயில் வருவர் வலம்; - குளக்கரைமேல்
வேர்தெரியாத வேலமரம்
வேடிக்கை பார்க்கிரது மேற்(கு)புறம்;
கல்லுகட்டுக்குள் ஒரு
முள்ளுத்திட்டு - அங்கே
காரமுள் செடியில் கவிதைகள்
‘மஞ்சளாய் மல்லார்ந்த காரப்பழங்கள்’
சிந்திக்கிடக்கும் சிரகுகலோடு
முந்தி வளர்ந்த நல்லரசன்;
வெண்சாரை புழங்கிட
வேர்தழுவிய செம்மண்புற்று;
வெளியூரார் சாக்கிரதை என்றோர்
விளம்பரத்தட்டு.
அரசனுக்குக்கீழ் ஆண்டவன்(அரசன்)
ஆனைமுகன்
ஆண்டுக்கொருதரம்
அவரை ஊரே வலம் வரும்
அவலும் கொழுகட்டையும்
அன்றுமட்டும் குவியும்
பட்டு ஆபரணமும் – சந்தனப்
பொட்டும் தோரணமும்
அரசமரத்துப்பிள்ளையாரை
அலங்கரிக்கும்
ஆவனி சதுர்த்தியில் இந்த
அவனி காப்போனை
பேரனியாய் பக்தர்கள் போற்றி,
வினாயகா ஜயஜய
வித்தகா ஜயஜய – என
அகவல் பாடி
அழைப்பர் கூடி
அந்த அருகம்புல் பிரியனை
அருகில் சென்று வணங்கிடும் சனம்
குருவே உன் திருப்பாதத்திற்கு என் சரணம்.
இந்த நினைவுகளின் நிழலாக
அன்றும்.....
குளக்கரையில் குதுகூலம்,
வெள்ளை காகிதத்தில்
நல்லத்தமிழ் எழுத்தாய் !!
நாற்றங்கால் மேல் நல்விதையாய் !!
விரிக்கையின்றி விதைந்து கிடந்தனர்
மக்கள் மணல்மீதில்;
வருத்தம் வீழ்ந்து விருப்பம்
வந்தது என் ஊர் மீது;
சிறகுகள் இல்லா
சின்ன டால்ஃபின்கள்
வரவுகள் அரியாத
உறவின் விரும்பிகள்
விளையாடி தீர்தனர் – குழந்தைகள்
மாலை சூரியனை மகிழ்விக்க
மேக்க்கூட்டங்கள்
மேடைபோட்டன – மெல்ல
காற்றும் கவிபாடியது
நீரானவள் மயங்கி
நிலத்தை தவழ்ந்தாள்
பலப்பலவென மழை இரைந்தது
மலமலவென மக்கள் களைந்தனர்
ஆடுகல் மட்டுமே அடையும் மண்டபத்தில்
ஓடி ஒளிந்தனர்
ஓசையும் ஒலிந்தது
ஆழ்ந்த அமைதி
சூழ்ந்த போதும்
‘பொட்பொட்டென' நீர்
சொட்டியது
திரும்பி பார்த்தால்.....
திகைப்பு ....
குடைக்குள் பிள்ளையார்;
படை பதுங்கினப்போதும் - அந்த
பைய்யன் மட்டும்.....?
அவன் நனைந்து...
அய்யனுக்கு குடைபிடித்தான்
அய்யமில்லை – அவன்
அனைவரின் நெஞ்சிலும் இடம்பிடித்தான்.
..........ஆக்கம், கவிஞன் சாதி(புனைபெயர்)
சரித்திரதில் இடம் பெற எதயாவது சாதி
(நிஜப்பெயர் – சங்கர் ரங்கசாமி)

எழுதியவர் : ர.சங்கர் (23-Aug-13, 11:30 pm)
பார்வை : 180

மேலே