அம்மா இல்லாத வீடு
..
சில சத்தங்கள் குழந்தை காவ்யாவின் தூக்கத்தை க்கெடுத்து விழிக்க வைத்தது.:” காவ்யா..”. இரண்டு ,,மூன்று கரங்கள் அவளை நோக்கி நீண்டன ,,,,சிணுங்கி ...நெளிந்து ..எழுந்து உட்கார்ந்தாள்.நீண்ட கரங்களை கோபத்தோடு தள்ளி விட்டு அம்மா என்று கத்தினாள் ...இன்னும் ஓரிரண்டு முகங்கள் ஹாலில் இருந்து எட்டிப் பார்த்தன ...
எதோ விபரீதம் என்றுணர்ந்த குழந்தை அம்மாவை த்தேடி முகம் கோணி அழ தொடங்கினாள் ......அம்மா....
அம்மா ..விழிக்கும் போதே அருகிருந்து தலை கோதுவாள் ,,,,அள்ளி அணைத்து முத்தமிடுவாள் ... குட்டிமா ப்ரஷ் பண்ணிட்டு வருவாளாம். ,,அம்மா குடுக்குற பால சமத்தா குடிப்பாளாம். என்று கொஞ்சி எழ வைப்பாள்.
அம்மா.....கத்தியவாறே எழுந்து ஓடி வந்தவள் ஹாலுக்கு வந்ததும் அதிர்ந்து நின்றாள்.வெள்ளை துணியால் கிட்டத்தட்ட கட்டப்பட்ட நிலையில் முகம் மட்டும் தெரியும்படி கிடத்தப்பட்டிருந்தாள் அவள் அம்மா,
குழந்தை ஓடிச் சென்று அவள் முகத்தை தன் இரு கைகளால் தாங்கி னாள் ..அம்மா என்னம்மா செய்யுது?சொல்லும்மா... பீவர் இருக்காம்மா..? கேட்டவாறு நெற்றி ப் பொட்டில் கை வைத்து ப் பார்த் தாள் . அருகில் நின்ற அப்பாவை ப் பார்த்தாள்
“அம்மாக்கு உடம்பு சரியில்ல யாப்பா? டாக்டர்ட்ட கூட்டிட்டு போலாமா?”
குளுருதாம்மா என்று கேட்ட படி உள்ளே ஓடி ச் சென்று மற்றொரு போர்வையை தூக்கி வந்து போர்த்தினாள்
“காவ்யா...டாக்டர் வருவாரும்மா “
என்று சொன்ன அப்பாவின் பதிலில் சமாதானமாகி அவள் புத்தக ப் பையை தூக்கி வந்தாள் அப்பா இன்னைக்கு சண்டே தானே ஸ்கூல் கெடையாதே
அம்மா அருகிருந்தால் போதுமென்று அவள் மேல் சாய் ந்து அமர்ந்து நோட்டை ப் பிரித்து ஹோம் வொர்க் எழுத ஆரம்பித்தாள் .நோட்டின் மீது அம்மாவின் குண்டு கையெழுத்தில் காவ்யா எல்.கே .ஜி என்று எழுத ப்பட்டிருந்தது . .இடை இடையே அம்மா நெற்றியில் கை வைத்து ப் பார்த்து க் கொண்டாள் ..உடனே எடுத்து விட வேண்டும் என்பதால் ஐஸ் பெட்டி வைக்கவில்லை ,,,,யாரோ கொடுத்த.. பாலை வாங்கி ஒரே மடக்கில் குடித்தாள்
அட ப் ...பாவி மகளே ... இந்த பச்சைக் குழந்தையை ஒரு நிமிஷம் நெனச்சுப் பாத்திருந்தா இந்த முடிவுக்கு வந்திருப்பியா ?... உங்க குடிகார அப்பனையே தாங்கிட்டு உங்களையெல்லாம் நான் வளத்து ஆளாக்கலையா ?
இப்படி சின்ன பிரச்சனைக்கெல்லாம் இந்த முடிவை எடுத்தா என்ன செய்றது ?
திடீரென்று குரலெடுத்து அழும் அம்மாச்சியை இப்பொழுது தான் பார்த்தாள் ...பாட்டி என்று ஓடிச் சென்று கட்டிக்கொண்டாள் . ..”.அம்மாக்கு ஒண்ணுமில்லை பாட்டி அழா தீங்க “
அம்மா பக்கத்தில் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் குழந்தை பேசியது அங்கு கூடி இருந்த கூட்டத்தினரின் கண்களை க் குளமாக்கியது .
“பாட்டி , பாட்டி .அம்மாவ பத்ரமா பாத்துக்கங்க பாட்டி, நான் பாத்ரூம் போயிட்டு வரேன் “
திரும்பித்திரும்பி ப் பார்த்தவாறு சென்றாள் காவ்யா. திரும்பி வரும் போது கூட்டம் முழுக்க அவள் அம்மாவை சுற்றி இருக்க கூட்டத்தினரை அகற்றி முட்டி மோதி உள் நுழைந்தாள் . அவள் ..புத்தகப் பையை யாரோ தூக்கி யாரிடமோ கொடுக்க.,.அவள் அம்மாவை ஐந்தாறு பேராகத் தூக்க முயற்சித்தார்கள் ஓடிச் சென்று அவள் அம்மாவின் வயிற்றை த் தன் இரு கைகளாலும் இறுக கட்டிக்கொண்டாள் .
“.எனக்கு அம்மா வேணும் ..எனக்கு அம்மா வேணும் “ கதறி அழுதது குழந்தை.
“அம்மாவைக்கூட்டிட்டு ப்போகா தீங்க ப்ளீஸ்” . கதறி அழுத காவ்யாவை ரொம்பவும் சிரமப்பட்டு த் தூக்கினார் அவள் தாய் மாமா,..
“காவ்யா கண்ணு அம்மாவை டாக்டர்ட்ட தாம்மா கூட்டிட்டு ப்போறோம் நீயும் வேணும் னா கூடவா “
மாமா சொன்ன பதிலில் சமாதானமாகி மெல்ல த் தலையாட்டினாள் கண்ணீரோடு .. அம்மாவைக் கொண்டு போய் ஆம்புலன்சில் எற்றி னார்கள் , கூடவே மாமாவும் மருமகளும் ஏறி னார்கள் . அவர்கள் குடும்ப டாக்டரின் ஹாஸ்பிடல் முன்னால் நின்ற ஆம்புலன்சிலி ருந்து இறங்கப் போனார் மாமா,,
“வாம்மா .. காவ்யா நாம போய் டோக்கன் போடுவோம் ...அம்மாவை வேற வழியா கூட்டிட்டு வருவாங்க “
அவள் அம்மாவைப் பார்த்தாள்
“ அம்மா ஊசிக்கெல்லாம் பயப்படா தீங்கம்மா நானிருக்கேன் “ என்று சொல்லி குனிந்து தாயின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள் கடைசி முத்தம் என்டறி யாத அக்குழந்தை...
சொல்லி வைத்தாற்போல் காத்திருந்தார்கள் காவ்யாவின் பள்ளி தோழியின் பெறோர்கள்
“ஆன்டி. நீங்க இங்க இருக்கீங்க ஷர்மி . எங்க ?”
“எனக்கு உடம்பு சரியில்லம்மா ..அதுதான் டாக்டரை பாக்க வந்தேன் .. ஷர்மி க்கு ஊசினா பயமா ச்சே அதான் வரலை” ,”,எங்க அம்மா க்கும் உடம்பு சரியில்ல ஆன்டி கூட்டிட்டு வந்திருக்கோம் “
என்று சொன்ன குழந்தையை வாரி எடுத்து அணைத்து க் கொண்டாள் அந்த த் தாய்,
அதற்குள் ஷர்மியின் அப்பா வந்தார் .
“டாக்டர் ஏதோ முக்கியமான ஆப்பரேஷன்னு இன்னொரு ஹாஸ்பிடல்ல இருக்காராம் .. காவ்யாவோட மாமா அவங்கம்மாவை அவசரமா வேற ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப்போறார் வாங்க நாமளும் போக லாம் “
குழந்தை முகத்தில் பீதி தெரிந்தது .ஆனாலும் அவர்களோடு சென்றாள் காவ்யா.
வீட்டிற்கு சென்று நிலைப்படியில் இரண்டு கைகளையும் வைத்து சடக்கென்று நின்றது குழந்தை .வீடெல்லாம் கழுவி விடப்பட்டிருந்தது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நெருங்கிய உறவினர் வீட்டில் நடந்தது போல் நடக்கிறதே ..காவ்யா யாரிடமும் பேசவில்லை.. நடை பிணமாக செருப்பை அகற்றினாள்..யாரோ அழைத்து ச் சென்றார்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பாட்டி விட்டார்கள்.. சட்டை மாற்றி விட்டார்கள்..காவ்யா வெறித்த பார்வையோடு நின்றாள் எதுவும் பேசவில்லை ரூமுக்கு அழைத்து சென்று கட்டிலில் உட்கார வைத்தார்கள் எங்கும் கழுவி விடப்பட்டிருந்தது ..பெட் சீட் தலை யணை .உறையெல்லாம் மா ற்றப் பட்டிருந்தது அவள் புத்தகங்கள் ஒரு மேசை மேல் இறைந்து கிடந்தது .அவள் ஸ்கூல் பையை யாரோ அலசி ஒரு கயிற்றில் காயப்போட்டிருந்தார்கள் .
அம்மா இல்லாத வீடு எல்லாமே மாறிப்போயிருந்தது
யாரோ இரண்டு இட்லிகளை ஒரு தட்டில் வைத்து கொண்டு நீட்டினார்கள் சடக்கென தட்டி விட்டாள்,
“காலையிலிருந்து நீ ஒன்னுமே சாப்டலியே காவ்யா”
பதில் சொல்லவில்லை வாய் மட்டும் அம்மா அம்மா என்று அரற்றி க் கொண்டே இருந்தது ,,எங்கேயோ யார் வீட்டிலோ இருப்பது போலிருந்தது..மழித்த மீசையோடு வந்து மகளை தூக்க கை நீட்டிய அப்பாவை அடையாளம் தெரியாமல் பயந்து பின் வாங்கினாள்
“ நான் அப்பாடா “
என்று சொன்னவரை வெறித்துப் பார்த்தாள் அம்மா சாமி கிட்ட போயிட்டாங்களாப்பா ? என்று கேட்க குலுங்கி அழுதவரை யாரோ நகற்றி கொண்டு போனார்கள்.
அம்மா இல்லாத வீட்டில் அவளுக்கு எதுவும் பிடிக்கவில்லை. எங்காவது ஓடி விடலாம் போல் தோன்றியது ஓடி ச் சென்று பீரோவை திறந்தாள்.. அம்மாவின் புடவைகள் ஐந்தாரை அள்ளிக்கொண்டு வந்து கட்டிலில் போட்டு அதன் மேல் சுருண்டு படுத்து அம்மா அம்மா என்று தேம்பி அழுதவாறு தூங்கிப் போனாள். மாலை பால் தரலாம் என்று எழுப்ப ச் சென்ற அம்மாச்சி திடுக்கிட்டுப் போனார்....
“காவ்யா “
உடம்பு அனலாய் க் கொதித்தது .குழந்தை கிட்டத்தட்ட சுயநினைவின்றி கிடந்தாள்..
டாக்டரிடம் தூக்கி க் கொண்டு ஓடினார்கள் /
கரெக்ட் டைமுக்கு கொண்டு வந்துட்டீங்க இப்போ நல்ல தூங்கட்டும் ..டிஸ்டர்ப் பண்ணாதீங்க
ஒண்ணுமே சா ப்டலயே டாக்டர் என்று சொன்ன .அம்மாச்சியை திரும்பிப் பார்த்தார், ஷாக்னாலையும் பீவர்னாலையும் .பசி எடுத்திருக் காது ,,பாக்கலாம் ..டிரிப்ஸ் போட்டிருக்கேன் ஒண்ணும் பயப்படாதீங்க குழந்தை .ஆழ்ந்த தூக்கத்திலிருந்தாள் , ,இன்னும் அம்மாவின் ஒரு புடவையை கையில் இறுக ப் பற்றியிருந்தாள்
“ஒரு நாள் சமாளிக்கவே கஷ்டமா இருக்கே.?.இந்த பிஞ்சு படப்போற அவஸ்தைய ஒரே ஒரு நிமிஷம் நெனசுப்பாத்திருந்தா இப்படிப் பண்ணியிருப்பாளா ? குழந்தையோட கஷ்டத்த நெனச்சிருந்தா தன் கஷ்டம் பெருசா தெரிஞ்சுரு க் காதே .. நீ பாட்டுக்கு போய்ட்ட ,இந்த கொழந்த என்ன பாடு படுது பாக்க சகிக்க லயே கடவுளே நான் என்ன பண்ணுவேன் ?..”
அம்மாச்சி புலம்பி க்கொண்டே இருந்தாள் .