இது ஒரு திருநங்கையின் உண்மை கதை
பண்டைய கலங்களில் திருநங்கைகளை மிக்க மரியாதையுடனும் தெய்வபிறப்பாகவும் பாவிக்கப்பட்டு உள்ளனர் என்று வரலாற்று செய்திகள் தெரிவிக்கின்றன .ஆனால் இன்றைய திருநங்கையின் நிலை என்னவென்று உங்களுக்கே தெரியும் .சமுதாயம் திருநங்கைகளை கேலி,கிண்டல்,ஒதுக்கி வைத்தல் மட்டுமே செய்கிறது குடும்பத்தாரும் இவர்கள் பிறப்பை குடும்ப கௌரவத்திற்கு இழுக்காக நினைத்து வீட்டை விட்டு துரத்துகின்றனர் இத்தனை கேலி கிண்டல் துயரம் இன்னல்கள் போன்ற சவால்களை எதிர்கொண்டு வாழ்ந்த ஒரு திருநங்கையின் உண்மை கதையை உங்கள் முன் சமர்பிக்கிறேன் இது யாருடைய மனத்தையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல பண்படுத்த எடுக்கும் சிறு முயற்சி இதன் மூலம் ஒரே ஒரு திருநங்கையின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டால் அது தான் என் எழுத்துக்கு கிடைத்த வெற்றி..............
பாகம்
ஒரு சிற்றூரில் வறுமையால் வாடும் தினக்கூலியாக வேலை செய்யும் ஏழை தம்பதியருக்கு ஐந்தாவது மகனாக பிறந்தான் சிவா நான்கு பெண் குழந்தைகளுக்கு பிறகு பிறந்த மகன் என்பதால் தான் வறுமையையும் பொருட்படுத்தாமல் சிவாவை தனியார் ஆங்கில பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தாள் சிவாவின் தாய் . சிவாவும் ஐந்தாவதுவரை நன்றாக படித்தான் எல்லா கலைகளிலும் வல்லவனாக திகழ்ந்தான். அதே நேரம் அம்மா செய்யும் வேலைகளை கூர்ந்து கவனித்து அவள் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டை சுத்தப்படுத்துவது வாசலில் கோலம் போடுவது பாத்திரங்கள் கழுவிவைப்பது போன்ற வேலைகளை செய்துவந்தான். இதை கண்ட சிவாவின் தயார் சிறுப்பிள்ளையாக இருந்தாலும் நமக்கு உதவியாக இருக்கிறானே என்று மகிழ்ந்தாள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை ஆனால் சிவாவின் தந்தை இதையெல்லாம் கண்டித்து கொண்டே இருப்பார் ஆனாலும் கடைசி பிள்ளை செல்ல பிள்ளை என்பதால் பேசாமல் இருந்து விட்டார்.
சிவா ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது அவன் தந்தையாருக்கு வயிற்றில் கட்டி இருப்பதால் ஆப்ரெஷன் செய்ய வேண்டியதாயிற்று இதனால் வேலைக்கு போக முடியாமல் மூன்று மாதம் ஓய்வில் இருந்தார் இதன் காரணமாகவும் பெரிய அக்காவின் திருமணத்தினால் ஏற்பட்ட கடன் தொல்லை காரணமாகவும் குடும்ப செலவிற்கே பணம் இல்லாமல் தத்தளிக்க ஆரம்பித்தது சிவாவின் குடும்பம் இதனால் ஐந்தாம் வகுப்போடு தனியார் பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டு அதே ஊரில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கபட்டான் இங்கு தான் ஆரம்பித்தது சிவாவிற்கு பிரச்சனை..............
மீண்டும் சந்திப்போம்...................