அனுராதபுரத்தில் புலிக்கொடி

புவி நடு நடுங்க நடு நடுங்க
இளவேனில் பனிக்காற்று நின்றது
கடல் அலைகள் ஓய்ந்தன
வானில் கருமேகங்கள் சூழ்ந்தன
இடி இடித்த மின்னல்கள் அக்கருமேகத்தினுள்ளே பதுங்கின
அனுராதபுரத்தின் புத்த சிலைகள் பூமியில் பதுங்கின
உலகின் ஐந்து புதங்களும் அமைதியாயிருந்த தருணத்தில்

சிங்களவனின் அனுராதபுர வானூர்தி படை தளத்தில்
தன் பிள்ளையை கொன்றவனை பழிவாங்க
வரும் தாய் புலியைப்போல் அவிடத்தினுள்
புயலென சீறீப் புகுந்தன எம் கரும்புலிகள்

எம் கரும்புலிகளை கண்ட சிங்களவன் படை
நான்கு திசையிலும் தரித்து ஓடின

அப்போழுது அமைதியாயிருந்த ஐந்து புதங்களில்
எம் கரும்புலிகளின் இதயத்தில் குமுறிய ஐந்தாவது புதமான
அக்னி அவர்களின் வீரத்தில் வெளிவந்தன

கரும்புலிகளின் வீரத்தை காண விரும்பி உதிர்ந்த
ஆதவன் சிங்களவனின் கோட்டையில் புலிக்கொடியை
கண்டு தலைவணங்கினான் எம் கரும்புலிகளின் வீரத்திற்கு

எங்கள் நிலம் தான் குறைந்தது
எங்கள் வீரம் குறையவில்லையென
சிங்களவனுக்கும் உலகிற்கும் செவிக்க செய்த
இருபத்தியொரு கரும்புலிகளுக்கும்
வீரவணக்கம்

=== க.பிரபு தமிழன்

எழுதியவர் : க.பிரபு தமிழன் (26-Aug-13, 9:51 am)
பார்வை : 76

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே