தீர்ப்பை மாற்றி எழுதுங்கள்
உன்னிடம் பேச வாய்ப்பு கிடைத்த பொழுது- ஒரு
வார்த்தை தேடி அலைந்து பார்த்தேன் – சிறு
வார்த்தை கூட கிடைக்காமல் திக்கி திணறி போனேனே!
வாய்பிருந்தும் வாய் பேச முடியாமல் –ஒரு
வாய் பேசா ஊமையாய் ஆனேனே !
இரவெல்லாம் கண் விழித்திருந்து
கிழக்கு வெளுக்கும் பகலுக்காய்
ஒரு கொக்கைபோல் ஒற்றை காலில் காத் திருந்தேனே !
பகல் வந்த பின்னாலே
வண்ணக்கனவுகள் என்னில் சிறகடிக்க - ஒரு
வானவில்லாய் விண்ணில் பிறந்தேனே !
கண்ணே நான் உன்னை விரும்பிய பொழுது
என் கண்களில் காதல் அரும்பியது !
பெண்ணை நீ என்னை விட்டு விலகிய பொழுது
என் விழிகளில் கண்ணீர் பெருகியது !
நீ சாப்பிட்ட தட்டில் ஒருநாள் நானும்
விஷம் ஊற்றி சாப்பிட்டு பார்த்தேன் – அந்த
விஷம் கூட இனித்தது கொம்பு தேனாயடி
தேனடையில் தேனை எடுத்து வந்து –ஒருநாள்
சுவைத்து நானும் பார்த்தேன் –அந்த தேனும்
துளிகூட இனிப்பின்றி வேம்பாய் கசந்தது வீணாயடி!
நான் உன்னை பார்க்கும் பொழுதெல்லாம்-நீ
துள்ளி ஓடினாய் ஒரு புள்ளி மானாயடி.
என் மனதிடம் நானும் பலமுறை சொல்லிபார்தேன்
அவளை நீ மறந்து விடு என்று !
என் மனம் என்னிடம் சொல்லி போனது
அவளை மறக்க சொன்னால் என்னை
கொன்று போட்டுவிடு என்று!
காதல் தண்டனை போல –இந்த உலகில்
கடினமான தண்டனை வேறேதும் கிடையாது
காதல் தண்டனை இன்றி
தூக்கு தண்டனை என்றாலும்
உள்ளம் எளிதில் உடையாது !
நான் கெஞ்சி கேட்கிறேன் உங்களை
தீர்ப்பை மாற்றி எழுதுங்கள்
மனதை கொல்லும் காதல் தண்டனை வேண்டாம்
உயிரை கொல்லும் தூக்கு தண்டனை போதும் .
***************************************************
தன்னம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன் .