இதய சவக்குழி

வறண்டு போன
வார்த்தைகள்
என் உதட்டிலிருந்து
தெறிக்கிறது
உன்மேல்
தீப்பிழமபாக...!
உன் கண்ணீர்
துளிக்கு
அணை கட்ட
என் ஜீவனையும்
அடக்கி
உயிர்
கொடுத்தேனே....!
வறுமை
சித்திரம்
என் உடல்
முழுவதும்
படர்ந்து
கிடக்கிறது...!
பாசத்தால்
உன்னை
பணிய வைக்க
எண்ணி
பணத்தை
மறந்தேனே...!
நான் நித்திரையில்
இருந்தாலும்
என் மூச்சு
காற்றால்
உன் மேனி
சிலிர்த்திடுமோ
என்றெண்ணி
சுவாசத்தை
மறந்தேனே...!
நீ கூடு
கட்டி வாழும்
என் இதய
மரத்தின்
உயிர் வேரைப்
பிடுங்கியது
ஏனோ...?
உயிரும்
உதிரமும்
உறைந்து
விட்டது...!
உன் இதயத்தில்
குழி தோண்டி வை
நான் வந்து
உயிரற்று
உறங்க....!
***கே.கே.விஸ்வநாதன்*****