வருவோம் நாங்கள்!
பால்மணம் மாறாத
பாலாடைக் கட்டிக்குள்
பயங்கரத் தோட்டாக்கள்!
இந்தப் பிஞ்சு உடல்களின்
இரத்தக் கோடுகள்..நாளைய
ஈழத்தின் வரைபடங்கள்.
எங்கள் இலைகளையும்
கிளைகளையும் வெட்டிவிடலாம்!
வேரை....உன்னால் ஒன்றும்
பிடுங்க முடியாது.
புதைத்து விட்டோம் என்று
புளகாங்கிதம் அடையாதே!
முளைக்கும்போது உன்
சந்ததிகள் பால்குடிக்க
முலைகளே இருக்காது!
முள்ளிவாய்க்காலில்
சிந்திய ரத்தத்தை
சேமித்து வைத்திருக்கிறோம்!
சுதந்திர ஈழத்தின்
சுந்தர மேனியில்
சுடச் சுட பாய்ச்சுதற்கு!
வயற்காட்டு எலிகள் இல்லை.
வரலாற்றுப் புலிகள்!
வருவோம் நாங்கள்..எங்கள்
கனவைக் கலைத்தவரின்
கருவைக் கலைக்க!
சபதம்........ கவிமகன் காதர் ....