ச்சீ ஏன்டா !.. உனக்கு !!...

பொன்வான மேனியில்
பூவான பூமியில் பொறந்தொமுடா !...
புது வாழ்க்கையை பார்த்தொமுடா !...

மழலையாய் பிறந்து
குழந்தையாய் வளர்ந்து
கூடி வாழும் வாழ்க்கையில்
துணையாய் வந்தாள்ளடா !...
துணைக்கு துணையாய் இருந்தாள்ளடா !...

துணைக்கு துணையாய்
பணம் இருக்க
துணையும் பார்த்து பார்த்து
பரவசம் காட்ட
கண் இமையாய் இருந்தாள்ளடா !...
காணும் வாழ்க்கையும் சுகம்தானடா !!...

கூடி வாழும் துணைகளுக்கு
துணையாய் அன்று இருந்தேன்னடா !... நான்
கூடி வாழும் சொந்தங்களுக்கு
சுமையாய் இன்று போனேன்னடா !... நான்

வாழ்க்கைக்கு துணையாய் வந்த
வருமானம் வறுமையாய் போனதாலடா !...
வாழும் துணைக்கும்
நான் வெறுமையாய் ஆனேன்னடா !... நான்
வெந்துபோன வாழ்க்கைக்கும்
வீணான பேச்சுக்கும் வீழ்ந்தேன்னடா !.. நான்

துணை
சொல்லும் சொல்லால் சொன்னால்லடா !...

உனக்கு
ச்சீ பொண்டாட்டி புள்ள ஏனடா என்று !...

சுகம் தரும் வாழ்க்கைக்கு சுமையாக நானடா !...

நீ சொந்தம்கூடி வாழ்ந்தாலும்
நீ சுமையாய் இல்லாமலிருக்க
நீ செர்த்துவைடா சேமிப்பை
தினம் தினம் நீ !...

என்றும் அன்புடன்

எழுதியவர் : எல்விஸ் ராஜு (2-Sep-13, 8:16 pm)
பார்வை : 60

மேலே