எனக்கென்று

”எனக்கென்று
எதுவுமில்லாத நரகத்தில்
எனது
நடைபயணம்!

சொர்க்கம் என்று
ஆளாளுக்குக் கூறிக்கொள்கிறீர்கள்
யாருக்கு என்பதுதான்
எனக்குப் புரியவில்லை!

உங்களது
படுக்கையறை சொர்க்கங்கள்
எனது எப்படியாகும்!

உங்களோடு போராட
எனக்குத் திராணியில்லை
என்பதை நான்
தெரிந்தேதான் இருக்கிறேன்!

எனது மூச்சு கூட
என் பேச்சைக் கேட்காமல்
அடிக்கடி அடைத்துக் கொள்ளும்போது
உங்களை என்ன சொல்ல!

எனக்கென்று
எதுவுமில்லாத
நரகத்தில்
என் நடைபயணம்!

எழுதியவர் : செல்வ.இராசேசு (3-Sep-13, 1:30 pm)
பார்வை : 74

மேலே