அந்த நட்பை கைவிட்டுவிடாதே ...!!!
முடியாதடா விட்டு விடு
உனக்கு இது தேவையில்லாத
முயற்சியடா விட்டு விடு
என்று எந்த நண்பன் தடுக்கிறானோ
அந்த நட்பை விட்டு விடு ....!!!
முடியாத ஒன்றை உன்னால்
முடியும் என்று உசுப்பேற்றுபவனையும்
அந்த நட்பில் இருந்தும் விலகிவிடு ...!!!
இது என்னால் முடியாதடா
நிச்சயம் உன்னால் முடியும்
என்று எவன் தைரியம் கொடுக்கிறானோ
அந்த நட்பை கைவிட்டுவிடாதே ...!!!