உந்தன் நட்பு !!
எனக்காக என்னுடன் இருந்த அனைத்தையும் இழந்து விட்டேன்!!
இனியும் எதையும் இழக்க கூடாது என்றே தனிமையை அதிகமாக மனம் விரும்பினாலும் இழப்பினை சந்தித்து கொண்டே இருக்க விதி செய்த சதி தான் உன் நட்போ!!
நானாக எதையும் உன்னிடம் எதிர்பார்க்கவில்லை.உன் நட்பு மட்டும் போதும் என்று அன்பினை அதிகமாய் பொழிந்து என்னிடமிருந்து என் நட்பினை பெற்றாய்.
அன்பினை கொடுத்தது தான் என் தவறாகி போனதோ ?! உன்னை பறித்து கொள்ள என்னை சுற்றி பலர் வட்டமிடுகிறார்கள்.!.
மீண்டும் ஒரு நல்ல நட்பினை இழந்த சோகம் என்னை தாக்கி விடுமோ??
உன்னை பறித்து கொள்ள என் மீது காட்டப்படும் பொய்யான பாசங்கள் இதை எப்படி உன்னிடம் கூறுவது .... அமைதியாகி விட்டேன்.
மீண்டும் தனிமையை நோக்கியே பயணப்பட்டு விடுகிறேன். என் மீது கள்ளமின்றி பொழியும் அன்பினை இத்துடன் நிறுத்திக்கொள்!
உன்னை தக்க வைத்து கொள்ளும் மன உறுதியும்,பக்குவமும் என்னிடம் இல்லை. என் கவலைகள் ஒன்று தான் அது உன் சந்தோஷங்களை பற்றியதே!
உன் சந்தோஷங்கள் கொண்டே முடித்து விடுகிறேன்.. என் சந்தோஷங்களை!!