தொலைந்து போன கிராமம்

கிராமம் இருக்கிறது
தென்றல் தான் இல்லை ....!

ஆலமரத்திண்ணைகள்
அம்மணமாய்கிடக்கின்றன
அமர்ந்து பேசே
ஆட்கள் தான் இல்லை ....!

குளமுண்டு
குட்டைகளுண்டு
குளிப்பாட்ட
மது மட்டுமே உண்டு .....!

வயலும் வரப்புமுண்டு
வானொலியில்
வயலும் வாழ்வுமுண்டு
இங்கு
ரசித்துப்பார்க்க
பசுமை தான் இல்லை ....!

மயிலாட
முயலோட
மான்களும் ஓட ....

குயில்கள் கூவி
காகங்கள் கரைந்து
கிளிகள் பேசி மகிழ்ந்த
எங்கள்
கிராமத்து நந்தவனத்தில்
இன்று
மனிதன் மட்டுமே
தள்ளாடி தள்ளாடி
நடை பழகுகிறான் .....!

முகங்கள் இருக்கிறது
முகவரிகள் தான் இல்லை ....!

அந்நிய தேசத்தில்
அகதியாய் போனேனோ...?

இல்லை இல்லை
சொந்த தேசத்தில் தான்
அகதியாய்
தேடிக்கொண்டிருக்கிறேன்
தொலைந்து போன
என் கிராமத்து
வசந்தத்தையும்
தீட்டுப்படாத
என் கிராமத்து தென்றலையும் .......!

**********************************************************************

எழுதியவர் : வெற்றி நாயகன் (7-Sep-13, 9:17 am)
பார்வை : 245

மேலே