உன்னை நினைத்து

இதழ் தீட்டும்
புன்னகையால்
இமை மூட
மறந்து விட்டேன்

காந்த கண்களிலே
மனம் எங்கோ
தொலைத்து விட்டேன்

அன்ன நடையிலே
அசைந்தாடும்
சிலையாகி விட்டேன்

மொத்தத்தில்
என்னையே
மறந்து விட்டேன்
என்னவளே
உன்னை நினைத்து....

எழுதியவர் : Thavam (31-Dec-10, 9:32 am)
பார்வை : 393

மேலே