விநாயகர் சதுர்த்தி

முக்கண்ணர் மைந்தேரே
முழுமுதற் கடவுளே
கஷ்டங்களைத் தீர்க்கும்
கருணைமிகு கஜமுகா
இஷ்டங்களைக் கொடுக்கும்
இனிமைமிகு இறைவா
தும்பிக்கையினால் நம்பிக்கையளிக்கும்
அழகுமிகு ஆனைமுகா
வினைகளைத் தீர்க்கும்
வீரமிகு விநாயகா
பக்தர்களைக் காக்கும்
பாசமிகு பிள்ளையாரப்பா
உந்தன் பிறந்தநாளில்
நல்லருள் வேண்டி
வாழ்த்துப் பாடி
வணங்குகிறேன் விக்னேஸ்வரா !

எழுதியவர் : வந்தியத்தேவன் (9-Sep-13, 10:11 am)
சேர்த்தது : Vandhiyathevan
பார்வை : 73

மேலே