பிரிவு

அன்னல் பொழுதினிலே
அழகுற வந்தவளே
உன்னை நினைக்கையிலே
உள்ளம் புதுபிக்குதடி

உன்னை காணாத என் கண்கள்
உப்பி போனதேனோ நீ
இல்லாத பூமி தன்னில் நான்
இருந்தும் என்னபயன்

சீறி வந்த ஏவுகணை
சீண்டாமல் போனபின்னே
முள்ளி வாய்க்கால் தன்னில்
முத்தரமாய் வந்தபின்னே
பயங்கர போரின்போதும்
பாதுக்காப்பாய் வந்த பெண்ணே

கஷ்டம்கள் பல பட்டு
பட்டியை போல முகாம்களில் அடைக்கப்பட்டு
அல்லல் பட்டு வெளியே வந்தபின்னே
சிறப்புற கா பொ த தேர்வில்
சிகரமாய் ஜெயித்தபின்னே

டெங்கு என்னும் கிருமி பற்றி
அறியாமல் போனதேனோ
அலட்சியமாய் இருந்ததலோ
அலறவிட்டு சென்றாய்
உன் காதலின் நினைவை மறக்க
இராண்டு போனபின்பும்
எத்தனையோ பொழுதுகளில்
ஏக்கமாய் வந்து செல்லுகிறாய்

பல்லாண்டு போனாலும்
பாரினில் உந்தன் நினைவு போனாலும்
அழகாக கவிதை எழுத சொன்னவளே -என்
அகலாத நெஞ்சம் அதில்
உன் பிரிவு மாறாது

எழுதியவர் : அருண் (15-Sep-13, 10:41 pm)
Tanglish : pirivu
பார்வை : 62

மேலே