விடியற்காலை

ஆயிரம் வெண்தாமரை இதழ்களை கொண்டு வருட வந்திருக்கும்
என் இனிய விடியற்காலை பொழுதே வருக வருக ...!!
கலைமகளை போன்று வெண்மையின் உண்மை வடிவமே வருக வருக ...!!
கருமையின் பகைவனே ,கார்கால பொழுதே வருக வருக ...!!
என் இனிய தென்றலே வருக வருக ...!!!
நான் அறிவேன் மனிதர்கள் முட்டாள்கள் என்று
என்னையும் சேர்த்து தான் காரணம் வேண்டுமோ ...!!
உன்னை ரசிக்க தெரியவில்லையே
அதனால் தான் சென்று விட்டாயோ பாதியிலேயே அண்டார்ட்டிகாவிற்கு
இப்பொழுது மொத்தமாக செல்ல நினைக்கிறாயோ இந்த பிரபஞ்சத்தையே விட்டு
என் இனிய தென்றலே வருக வருக ...!!!
என் இனிய விடியற்காலை பொழுதே வருக வருக ....!!!