கொடுமை .

சேய் போல
நான் கரைய
பேய் போல
துரத்துகிறாய் !
பொருமை
பால் குடித்து
வெறுமை
கறி சமைத்து !
கட்டிலிற்கும்
தொட்டிலிற்கும்
உன்னால்
பூட்டுப் போட்டவள் நான் !
என்
பொன் நகையும்
புன்னகையும்
உன் நகைப்பில்
உளுத்துப்போக .
புழுத்துப்போன
பழமாய்
பழுத்துப்போன
கிழமாய்
காத்துக்கிடக்கிறேன் !
உயிர்மையெனும்
உதவிக்கரம்
வறுமை எனும்
வஞ்சகன்
வஞ்சம் தீர்க்கும்
நாள் எதுவோ ?