மீட்பது யார்?

மணி 5 ந்துக்கு எழுந்து..,
வரிவரியாய் உள்ள வாசலை அழகுபடுத்தி.

இடைவிடாது இடுப்பு வலியிலும்
பள்ளிக்கு செல்லும் தம்பிக்கு தக்காளி சாதமும்,,

ஆடு மேக்கச் செல்லும் அண்ணைக்கு தயிர் சாதமும்,,
டீ கடையில் அமர்ந்து பொழுதை போக்கும் தந்தைக்கு சாம்பார் சாதமும் செய்து முடித்து...

தீப்பெட்டி தொழிச்சாலைக்கு 5 நிமிடம் தாமதமானால் சம்பளத்தில் 5 ரூபா குறையும் என்று எண்ணி..
காலை உணவும் உண்ணாமல்
விறுவிறுன்னு ஓடி பேருந்து ஏருகையில்....

வலப்பக்கமும் ஆண்கள்
இடப்பக்கமும் ஆண்கள்,
இவர்கள் மத்தியல் சிக்கிய
எங்கள் வாழ்க்கையை...
யார்தான் மீட்கப்போகிரார்கள்.....?

எழுதியவர் : vinothkrish (18-Sep-13, 9:21 am)
சேர்த்தது : vinothkrish87
பார்வை : 51

மேலே