+இந்த வாழ்க்கை வேள்வியோ!+

வண்ணத்துப்பூச்சியின் வண்ணம் கொண்டு வாழவந்தேன்!
வாழ்க்கையெல்லாம் உன் மனதை ஆளவந்தேன்!
எண்ணத்தை கலைத்துவாழ்வில் விழவைத்து விட்டாயே!
ஏழரை யாகிஎன்னை அழவைத்து விட்டாயே!

காதலிக்கும் போதோ ராணிபோல பார்த்துக்கிட்ட!
கல்யாணம் முடிஞ்சதும் தேனீபோல கொட்டுறீயே!
பேதலிச்சு நான்அலஞ்சேன் உன் பின்னாலே!
போதையிலே மூழ்கி பேதைஎன்னை அடிப்பதேனோ?

சொந்தங்களைபிரிஞ்சு உன்னை சொந்தமாக்கி கொண்டேனே!
பந்தங்களை அழவச்சு பாவிநானும் வந்தேனே!
பழகும்வரை பாசமெனும் நாடகந்தான் போட்டியோ!
கலகங்களை நடத்துகின்ற வேஷதாரி ஆனாயோ!

என்னைநினைச்சா மனசுபூரா மழையின்னு சொல்வியே!
எனக்காக உன்னுயிரை தருவேன்னு சொல்வியே!
நம்பிவந்த என்னுயிரை எடுப்பதுதான் நியாயமோ!
கம்பிஎன்னும் கைதிபோல இந்தவாழ்க்கை வேள்வியோ!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி ‍‍‍ ‍‍‍‍‍‍‍ (24-Sep-13, 12:40 pm)
பார்வை : 58

மேலே