அன்பால் சிகரம் தொடும் தோழி சுதாவுக்கு
எழுத்தால் உலகம்
மாறுதோ இல்லையோ
உன் `எழுத்தால்`
என்னிதயம் மாறியது
என்னினிய தோழி.......!
சுந்தரத் தமிழில்
சத்தான கவி படைத்து
சிகரத்தைத் தொடும்
சாதனைப் பெண்ணே
வாழ்த்துக்கள் உந்தனுக்கு..!
உண்மையன்பைத் தேடி
களைத்துச் சலித்து
விரக்தியிலிருந்தவேளை
`வாடிய பயிருக்கு வான்மழை போல`
மூழ்கடித்தாய் உன்னன்பினால்...!
முகமறியா நட்புகளின்
இதயத்தில் வாழ்பவளே,
அன்பால் அகிலத்தை ஆண்டு
உன் ஆராய்ச்சிப் படிப்பில்
உச்சம் தொடுவாய் அச்சமின்றி..!
எழுத்துப் பூந்தோட்டத்தில்
பாரபட்சமின்றி
இன்முகமாய் வலம்வரும்
தென்றல் காற்றே
வாழ்க நீயும் வளம்பெற்றே ..!
முப்பொழுதும் உன் கற்பனையில்
எமைத் திளைக்கவைத்து
தேமதுரக் கவிமூலம்
அன்னைமொழியைக்
காதலிக்க வைத்தாய் ....!
தாய்மையைப் போற்றி
இயற்கையை நேசிக்கவைத்து
`எழுத்தை` உளமுருகிப் புகழ்ந்து
பிரசவத் தாயின் வலியுணர்த்தி
பூவையும் பெண்ணையும் ஒன்றுபடுத்தி..!
ஒன்று மட்டும் புரிகிறது
எதையும் சாதிக்காமலே
என்னெழுத்தால் உன்னிதயத்தில்
இடம்பிடித்தேனே
அதுபோதும் எனக்கு
என்னுயிர் உள்ளவரை தோழி...!!
---------------------------------------------------------------------
தோழி துர்க்கா