உன் வீட்டோடு வைத்துக் கொள்

நான் ஆத்திகனா அன்றி
நாத்திகனாவென்ற
ஆராய்ச்சி
தேவையில்லை உனக்கு..!

நீ ஆத்திகனா அன்றி
நாத்திகனாவென்ற
ஆராய்ச்சி
தேவையில்லை எனக்கு..!

கடவுள் பாதி
மிருகம் பாதிபோல்
இரண்டிலும் பாதிபாதியாய்
நாமிருப்போம்
அதுவல்ல பிரச்சினை .......!

உருவமற்ற இறைவனை
மானசீகமாய் உருவப்படுத்தி
கட்புலக் காட்சிக்குள்
சிறைப் பிடித்தோம்
அகக் கண்ணால்
வழிபட முடியாதவனுக்காய்..!

ஆடைகளால் செவ்வனே
அழகுபட அலங்கரித்தோம்
கடவுளரின் புனிதம் காக்க......
அவர்தம் மானம் காக்க......
அது எம் விருப்பம்..!

எம் கடவுளரை
நிர்வாணமாய் வரைய
நீ யார் என்பதுதான்
உன் முன்னேயுள்ள
என் கேள்வி.............!

அழகியலில் நிர்வாணமென்று
எதுவுமில்லையென
நீயுரைத்தால்
நான் சொல்கிறேன்
ஆடையின்றித் திரிய
உன்னால் முடியுமா ...!

அழகியல் வேண்டுமென்றால்
உன் வீட்டுப் பெண்டிரை
நிர்வாண ஓவியமாய்
நிர்வாணச் சிலையாய்
வடித்துக்கொள்............!

அவர்களின் நிர்வாணத்தை
ஊரறிய உலகறிய
காட்சிக்கு வைத்துக்கொள்
விளம்பரமும் கிடைக்கும்
வியாபாரமும் நடக்கும்....!

இறுதியாக
உனக்கொரு செய்தி
உன் அழகியலை
உன் வீட்டோடு வைத்துக்கொள்
எம் கடவுளரோடு அல்ல ..!!
--------------------------------------------------------------
தோழி துர்க்கா

எழுதியவர் : தோழி துர்க்கா (28-Sep-13, 7:38 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 138

மேலே