ஆண்குமரு
சடங்குகள் இல்லை
சம்பிரதாயங்கள் இல்லை
சன்மானம் இல்லை
சந்தோசமும் இல்லை
ஆனாலும்
ஆண் ஆவான்
ஆண்குமரு !
மாதா மாதம்
மாற்றங்கள் இல்லை
மாராப்பு சேலைகள்
தேவையும் இல்லை
ஆனபோதும்
ஆண் ஆவான்
ஆண்குமரு !
அரும்பு மீசை
குறும்பு செய்யும்போதும்
ஆங்காங்கே
முகப்பருக்கள்
முத்தம் கொடுக்கும் போதும்
குரல் ஓசை
குணம் மாறிடும்போதும்
ஆண் ஆகின்றான்
ஆண்குமரு !