உன்னுடன் நான்....
படித்ததில் தைரியம் தந்தது:
சிங்கத்தை செல்லப்பிராணியாக வளர்க்கும் தென் ஆப்பிரிக்க பெண்:
120 கிலோ கிராம் நிறையுடைய சிங்கமொன்றை தனது வீட்டில் பெண்ணொருவர் செல்லப் பிராணியாக வளர்த்து வரும் விசித்திர சம்பவம் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது. வோட்டர்பேக் எனும்இடத்தில் வசிக்கும் அன்னெல் கினைமன் (31 வயது) என்ற பெண், ரிம்பா என்ற அந்த சிங்கம் குட்டியாக இருந்தது முதல் வளத்து வருகிறார்.
இந்த சிங்கம் தினசரி 9 கிலோ உணவை உண்டு வருகிறது. அது இறைச்சியுடன் இனிப்பு உணவுகளை உண்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறது. அத்துடன் அது கோப்பியை அருந்துவதிலும் நாட்டம் கொண்டுள்ளது.
அன்னெல் இந்த சிங்கத்துடன் 6 பூனைகள், ஒரு சிறுத்தைக் குட்டி, 5 சிங்கங்கள், ஒரு வெள்ளை சிங்கம் மற்றும் ஒரு புலி என்பவற்றையும் வளர்த்து வருகிறார்.
உன்னுடன் நான் என்றும் நாம் நண்பர்களோடு வாழும் போது இந்த பெண்ணின் வாழ்க்கை பற்றி நினைக்கும் போதே தேகம் சிலிர்க்கிறது அல்லவா??

