துயரம்
![](https://eluthu.com/images/loading.gif)
வேதனை பாதி ஏக்கம் பாதி
வெகுவாக மனதில் மறைந்திருக்க
தாழாலாமல் தவிப்பும் விழிக்கதவை
தட்டிச்செல்ல….. மறைக்க முடியாமல்
அவனை மறக்கவும் முடியாமல்
தவிப்புடன் அவன் முகம் காண
செல்லும் போது…. பார்க்க
முடியாத தூரத்தில் மங்கலான ஒளியில்
அவன் முகத்தை கண்ட அவள் என்ன
செய்வாள்? செய்வதறியாமல் சிலையாக
மாறியவளை… சிரிப்புடன்
பார்த்த அவன் பார்வை அந்த
வேதனையிலும் வெட்கத்தை
அள்ளித் தெளித்தது …. கண்களில் வந்த கண்ணீரும்
அவன் புன்னகை நிறைந்த முகத்தை
பார்த்ததும் பூரிப்பில் தித்தித்தது…
ஆயினும் எண்ணற்ற துயரத்தை
மறைக்கும் முயற்சியின் வெளிப்பாடு
இது என்பது நம்மை தவிர யாருக்கு
தெரியும்….? இருமனங்களும்
பேசிக் கொண்டது இதுதான்
துயரம் என……..