அறுசுவையில் அதிசயமோ குளச்சல் !
வாருங்கள் தோழமையே !- எங்கள் ஊர்
சுவையை கேட்டு பாருங்க !
சுவைத்திட வந்து பாருங்க !
சொல்லுறதை கேளு - இது
எங்க ஊரு சோறு !
அறுசுவை ஊறும
ஆறு வகை சோறு !
நாலுவகைச் சோறு எங்கும்
இரண்டுவகைச் சோறு இங்கு - அது
தேங்காசோறு மஞ்சசோறு !
பிரியமுடன் சொல்ல
பிரியாணி எட்டு !
எட்டில் ஓன்று
எங்கும் இல்லையோ ??
இல்லாபிரியானிக்கு
இட்டபெயர் "ஐஸ்பிரியாணி "!
அப்பத்தை கொஞ்சம்
சொல்லுறேன் கேளு !
ஒரட்டி நெய்யோரட்டி
பாலாடை நல்லநூலாடை !
பார்க்க சுவையூறும்
சுவைக்கத் தேனூறும் !
அப்பத்தை அடுக்கிவிட்டு
Oottataiyai விட்டால் எப்படி ?
ஓட்டடை !
சின்ன முக வட்டம் !
சிறிய ஓட்டைகள் கூட்டம் !
சேரும் சேர்வைகளால்
சுட்டெடுக்கும் அப்பம்
ஓட்டைகள் ஒப்பம் !!
களிப்புடன் சொல்ல
கழிகள் பலவிதம் !
சக்கைகழி பழக்கழி
கழிகளில் பொன்கழியாம் "சக்கோலி " !
அந்தி தேநீர்க்கு
முந்திவரும் .......
முட்டசுருக்கா பழபத்திரி
முறுக்கு முள்ளுமுறுக்கு
கின்னத்தப்பம் கலத்தப்பம் !
சொல்லவே சுவையூறும்
நல்ல செம்பலுவா !!
விரும்பி செய்து
விருந்துக்கு காத்திருப்பு !
வாருங்கள் தோழமையே !
கண்டு மகிழலாம் ! கொஞ்சம்
உண்டும் மகிழலாம் !!!
நட்பில் nashe