சிலையும் நீதான்... சிற்பியும் நீதான்...
சிலையும் நீதான்
சிற்பியும் நீதான்
உன்னை தவிர யாராலும்
உன்னை அழகாய் செதுக்கி விட முடியாது
விதையும் நீதான்
விதைப்பவனும் நீதான்
உன்னை விட தவறாமல்
உனக்கு யாரும் பருவம் பார்க்க முடியாது
சர்ப்பமும் நீ தான்
மகுடியும் நீதான்
உன்னைத்தவிர யாரும்
உன்னை ஆட்டுவிக்க முடியாது
கடவுளும் நீதான்
பக்தனும் நீதான்
உனக்கான தெய்வீகத்தை
உன்னைத்தவிர யாராலும் உணர முடியாது