ஆசாமிகள் என்றும் சுவாமிகள்ஆக முடியாது.

முன்னோர்கள் காண்பித்த, வழிபட்ட கோவிலில் உள்ள தெய்வங்களை கும்பிடுங்கள். தனி மனித வழிபாடு தவிர்த்துடுங்கள். எந்த தனி மனிதனுக்கும் தனி சிறப்பும், தெய்வ அருளும் கிடைக்கப் பெற்றதாக இந்த கலியுகத்தில் சான்றுகளும், நிகழ்வுகளும் இருப்பதாக இல்லை.

வர வேண்டிய இன்பமும், துன்பமும், பிறர் தர வாரா.வர வேண்டிய நேரத்தில் வந்து தான் தீரும்.விதியையும் மதியால் வெல்லலாம் என்ற விதிக்கு இந்த இடத்தில் மதி என்பது நேர்மையே.

நேர்மை வழி சென்றால், கடை பிடித்தால் விதியை வெல்ல முடியம்.

ஆசாமிகள் என்றும் சுவாமிகள்ஆக முடியாது .தவறான மனிதன் பின் சென்று தவறான வழி சென்று, மன நிம்மதி இழந்து, பணத்தையும், சுய மரியாதையையும் இழந்து சிரமப்பட வேண்டுமா.

கோவிலில் சென்று தான் சாமி கும்பிட
வேண்டும் என்பதில்லை.வீட்டிலே ஒரு நொடி பரம்பொருளை நினையுங்கள். இப்படியாவது கோவிலில் கூட்டம் குறையட்டும்.

எழுதியவர் : arsm1952 (10-Oct-13, 2:34 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 54

மேலே