உன்னைத்தான்...

உன்னைத்தான் எண்ணத்தான்
இரவினை படைத்திட்டானா!
என்னைத்தான் கொல்லத்தான்
கூர்விழி கொடுத்திட்டானா!

மண்ணைத்தான் பார்த்துத்தான்
பாதம்நடை பழக்கினானா!
விண்ணைத்தான் இல்லை எல்லைத்தான்
அழகு என்று அனுப்பிட்டானா!

கொல்லன்தான் பிரம்மன்தான்
அச்சில்யிட்டு வார்த்திட்டானா !
வெண்ணைத்தான் மெழுகுபொம்மைத்தான்
யாரா? உன்னை யூகிப்பானா !

வில்லைத்தான் காளைக் கொம்பைத்தான்
வளைத்துத்தான் புருவம் செய்திட்டானா !
மீனைத்தான் கொட்டும் தேளைத்தான்
வைத்துத்தான் கண்ணைப் பொருத்திட்டானா !

உறவுதான் எனக்குத்தான்
என்றுன்னை பிறப்பித்தானா !
மரணம்தான் நீயற்றே
எனக்கென்று எழுதிட்டானா? .

எழுதியவர் : ந ம கி (11-Oct-13, 4:09 pm)
பார்வை : 93

மேலே