+கொஞ்சம் காதல் கொடு போதும்!+
காதல சொல்ல வந்தேன் - நான்
காதல சொல்ல வந்தேன்!
மோதல மட்டும் விரும்பும் உன்னிடம்
காதல சொல்ல வந்தேன் - கிளியே
காதல சொல்ல வந்தேன்!
தள்ளிவிட வேணாம் - என்னை
சின்ன இடைமானே!
எள்ளி நகையாட - இதில்
என்ன வுண்டுதேனே!
என்ன வுண்டுதேனே!
கெஞ்சிடும் என்னிடமே - நீயும்
மிஞ்சிடக் கூடாதே!
கொஞ்சிட வேண்டாமே - கொஞ்சம்
தஞ்சம் கொடுபோதும்!
தஞ்சம் கொடுபோதும்!
மோதல மட்டும் விரும்பும் உன்னிடம்
காதல சொல்ல வந்தேன் - கிளியே
காதல சொல்ல வந்தேன்!
என்னை சோதிக்கவேணான்டி - நான்
பாதிப்பு ஆவேன்டி!
ஏதும் போதிக்கவேணான்டி - நானும்
ஆகிடுவேன் ஆண்டி!
ஆகிடுவேன் ஆண்டி!
துடிக்கும் இதயத்தை - நீயும்
நொறுக்கி விடாதே!
அணைக்க வேண்டாமே - கொஞ்சம்
காதல் கொடுபோதும்!
காதல் கொடுபோதும்!
மோதல மட்டும் விரும்பும் உன்னிடம்
காதல சொல்ல வந்தேன் - கிளியே
காதல சொல்ல வந்தேன்!