பூஜ்யம்

இறைவா நீ ஓர் பூஜ்யம்.
நீ இல்லாமல் எங்களின் ராஜ்ஜியம் இல்லை
ஏன் எண்களே இல்லை.
நாங்கள் வளரவும் நீ தேவை
நாங்கள் தேய்ந்து மடிவதும் உன்னிடம் தான்.
எங்களுக்கு முன்னால் நீ நின்றால்
உன்னை நாங்கள் மதிப்பதில்லை
நீ எங்களுக்கு பின்னால் வந்தால் தான்
எங்களுக்கே மதிப்பு.
எங்களின் ராஜ்ஜியத்தில் விலை மதிப்பில்லா
ராஜன் நீ.
ஆதி ஒன்றாக இருக்கலாம்.
மீதி எல்லாம் பூஜ்யம் தான்.
உந்தன் விலை மதிப்பில்லா ராஜ்ஜியத்திலே நாங்கள்!

எழுதியவர் : சாய். (15-Oct-13, 10:05 pm)
சேர்த்தது : சாய்
பார்வை : 114

மேலே