வேலை பளு
அருக அருகே இருந்தாலும்
மின்னஞ்சல்/ குறுஞ்செய்திகளில் விசாரிப்போம்
ஏனென்றால் வேலை பளு...
நண்பர்களை எங்கு பார்த்தாலும்
gettogether பற்றி மிக தீவிரமாக விவாதிப்போம்
ஆனால் நண்பர்கள் முகம் மறைவதற்குள் அதை பற்றி மறந்துவிடுவோம்
ஏனென்றால் வேலை பளு...
எந்த விஷேசம் என்றாலும்
சனி/ஞாயிறுகலிள் வரும்படி பார்த்துகொள்வோம்
சாவையும் சேர்த்து...
ஏனென்றால் வேலை பளு...
ஒரே ஒரு கவிதை/கதையில்
எங்கள் வாழ்கையே ஒரு கணத்தில் திரும்பி பார்போம்
ஆனால் மறு கணம்...
ஏனென்றால் வேலை பளு...
எங்களை குழந்தைகளுக்கு
தாத்தாவையும் பாட்டியையும்
புகைபடத்தில் அறிமுகம் செய்துவைத்தோம்
ஏனென்றால் வேலை பளு...
வாரத்திற்கு ஒரு முறை
அம்மா அப்பாவையும்
வருடத்திற்கு ஒரு முறை
உறவுகளையும்
தொலைபேசியில் விசாரிப்போம்
ஏனென்றால் வேலை பளு...
அம்மாவும் அப்பாவும்
சொந்த ஊரில் அநாதைகளாய்
நாங்கள்
வாழ வந்த ஊரில் அநாதைகளாய்
வாழ்கிறோம்
ஏனென்றால் வேலை பளு...
வேலை பளு வேலை பளு என்று சொல்லி
எங்கள் குடும்பமே சுருங்கி போனது nuclear family -யை
வேலை பளு வேலை பளு என்று சொல்லி
நாங்கள் இழந்தது இதை எல்லாம்தான்
அம்மாவின் மடி
அப்பாவின் ஆறுதல்
குழந்தையின் பாசம்
மனைவியின் அரவணைப்பு
நண்பர்களின் உற்சாகம்
உறவுகளின் உறுதுணை
வேலை பளு வேலை பளு என்று சொல்லி
நங்கள் பெற்றதை விட இழந்ததே மிக அதிகம்
ஆனாலும் நங்கள் எங்களுக்கு சொல்லிக்கொள்ளும் சாக்கு வேலை பளு...