என் தேசத்து காவல்காரன்
![](https://eluthu.com/images/loading.gif)
அரசு வேலை தான்
ஆயிரம் மைல்கல் கடந்து
இன்று எல்லையோரம் நிற்கிறோம் தூக்கம் கடந்து,
ஈன்று எடுத்த அன்னையை விட்டு
உறவுகளை பிரிந்தும் இன்று
ஊக்கத்தோடு இருக்கிறோம்,
என் தாய் நாட்டிற்காக ஆயுதம்
ஏந்திய என் கரங்கள் என்றும்
ஐயம் கொள்வதில்லை
ஒருவன் அல்ல நாங்கள் இங்கு
ஓராயிரம்பேர் போராடுகிறோம் (இன்று)
ஒளவ்வையும் இருந்திருந்தால் எங்களுக்கும்
(ஓர் ஆத்திச்சூடி எழுதி இருப்பாள்)
அஃது நான் எழுதும் எழுத்தல்ல
எனது உணர்வுகள்
எல்லையோரம் நான்....
என்றும் அன்புடன்
சே.பா