அன்னை
நான் புவித்தெழுவதற்கு
பூமியைத் தொடுவதற்கு
விளை நிலமாய்
உமது கருவறையில்
ஆதியில் பத்து மாதம் .
எனக்காக
ஒவ்வாத உணவை ஒதுக்கி
உறங்காது கண்விழித்து
கருவறையில் நீ நடத்திய
முதற்பாடம் அம்மா
அன்பின் பிறப்பிடம்
கருணையின் உறைவிடம்
பாசத்தில் நிறைகுன்றா நிறைக்குடம் .
உணவூட்டும் தருணத்தில்
உயரத்தில் அம்புலியை அழைத்தாய்
உமது கரங்களில் பதித்தாய்
நான் தவழ்வதை கண்டு
தரணியெங்கும் ஆனந்த பறையடித்தாய்
மழலை மொழிதனில் அம்மா என்றழைத்த கணம்
உள்ளம் பூத்திருப்பாய்
உச்சம் குளிர்ந்திருப்பாய்
தட்டுதடுமாறி தளர்நடையில்
நடக்கும் பொழுதினில்
அன்பு கரம் அழைத்து
எல்லையில்லா இன்பத்தில் திழைத்திருப்பாய்
தினமும்
தீவினை என்னை நெருங்காது
பாலூட்டி அமுது படைத்து
அழகு பார்த்த எனது அன்னையே
இவ்வகிலமே எனக்கு நீயே ......................
இளையகவி