கழிவுநீர் ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் போனஸ் தான்

ஆயிரக்கணக்கான எதிரிகளை நேரடியாக சந்திக்கும் கடைநிலை தொழிலாளர்களின் நலனுக்காக வேண்டுகோள்:
தினந்தோறும் ஆயிரக்கணக்கான கிரிமிகளிடமிருந்து நம்மை காப்பாற்றி "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" பழமொழிக்கு முன்னுதாரனமாக விளங்கும் துப்புரவு சுகாதார பணியில் ஈடுபடும் அரசு,மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிக முக்கியத்துவமும் சலுகைகளும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் . இதில் குறிப்பாக மனித கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வது, கால்வாய் சுத்தம் செய்வது என அனைத்து சுகாதார வளர்ச்சி பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் நலனிலும், அத்தொழிலாளர்களின் குடும்ப நலனிலும் மிகுந்த முக்கியத்துவம் எடுத்துக் கொண்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும். சட்டை கலையாத பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் சம்பளத்தை விட இவர்களுடைய சம்பளம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத வேண்டும்.
மேலும் போனஸ் மற்றும் இதர சலுகைகளிலும் துப்புரவு சுகாதார ஊழியர்களுக்கே அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அனைத்து துறை மற்றும் மக்களின் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை துரிதமாக செயல்படுத்தி வரும் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு, குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கும் பல திட்டங்களை செய்துள்ளது. சில காலமாக மாற்று திறனாளிகள் தனியார் நிறுவனங்களில் துப்புரவு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தபடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் சம்பளம் குறைவாகவே இருக்கிறது. எனவே இதுபோன்ற சம்பள நிர்ணயம் மற்றும் சலுகை குறித்த விசயங்களில் கவனம் செலுத்தி அவர்களின் வாழ்கை தரத்தையும் உயர்த்த வழி செய்ய வேண்டும்.
அமெரிக்க மற்றும் சில வல்லரசு நாடுகளில் துப்புரவு சுகாதார பணியாளர்களுக்கே அதிக முக்கியத்துவம் மற்றும் சலுகைகள் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.
மிகவும் முக்கியமாக கடைநிலை துப்புரவு பணியாளர்கள் மக்கள் மனதில் மதிப்பிர்க்குரியவர்களாய் பதிய வைத்து நன்மதிப்பு பெற மற்றும் அவர்களுடைய மேலான சேவையை கவுரவிக்கும் பொருட்டு அரசு அவர்களுக்கு அவ்வப்போது விருதுகளை வழங்க ஆவன செய்ய வேண்டும்.
டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமரன் M,A., சிட்லபாக்கம்