ஒரு ஏழை சிறுமியின் பார்வை
பள்ளி சென்றிட பாடங்கள் படித்திட
ஆசை உண்டு எனக்கு,
படித்திட வசதி இல்லை
படிக்க வைப்பர் யாருண்டு ?
ஒரு நிமிடம் வெடித்து காகித
குப்பைகளாக மாறும்
பட்டாசிற்கு இருக்கும் மதிப்பு
என் கல்வியின் மீது ஒருவர்க்கும்
இல்லாது போனதேன் ?
ஒரு ஏழை சிறுமியின் பார்வை .....