நான் கண்ட கனவு
பாமரர் பருக பதினைந்து ரூபாவிற்கு பன்னீர்செல்வம் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது எழுதிய கவிதை இது ...
பகல் நேரம்
பண்ணிரண்டு மணி
பன்னீர்செல்வம் தந்த நூறு மில்லி
பருகிட நினைத்தேன்
பக்கத்தில் இருந்தன
பல மதுக்கடைகள்
பதினைந்து ரூபா கொடுத்தேன்
பதினெட்டு தர வேண்டும் என்றான்
பளபளத்தது கையில்
பட்டாக்கத்தி ஒன்று
படீரென அவர் உடலில்
பாய்ந்தது அது
பக்கத்தில் இருந்தோர்
பதறி அலறினர்
பாபின் விஷம் போல் பரவியது
பயம் என் உடலெங்கும்
பதறி விழித்தேன்
பன்னீருதந்த நூறு மில்லி
பருகி உறங்கியதால் பார்த்த
பகல் கனவிது
பகற்கனவுகள் பலித்ததாக
பாசுரங்கள் ஏதும்
பறைசாற்றுவதில்லை
பாவி பாமரன் அறிவான இதை
பணம் ஒன்றே குறியாய் கொண்டவர்
பதவியில் இருப்பவர்கள்
பாமர மக்களை சுரண்டும் தொண்டு
பல்லாண்டுகள் தொடரும்