புத்தாடை
பெட்டி நிறைய இருக்கும்
போதே
வாங்கி வாங்கி
சேமிக்கிறோம் புத்தாடையை..
இருக்கும் எவருக்குமே
கொடுப்பதற்கு மனம்
வருவதில்லை!
கொடுப்பது போலவே நடிக்கிறோம்!
அவனும் வாங்குவது போலவே
பாவனை செய்கிறான்!
நாம் போட்ட துணியையாவது
அவனுக்கு கொடுப்போம்!
அதுவே அவனுக்கு புத்தாடை!
பாலும் தேனும் வேண்டாம் !
நல்ல
நாளிலாவது அவனை அழைத்து
வயிரார ஒரு வேளை
உணவாவது கொடுப்போம்!
அதுவே
அவனுக்கு நிம்மதி கொடுக்கும்!