மனிதனை மனிதன் நேசிப்போம்

எந்நாட்டவராயினும்
நம்மவர் எனக்கொள்
எம்மொழி அவர் பேசினும்
மானிடன் எனக்கொள்...

எம்மதமாயினும்
சம்மதம் எனச்சொல்
எக்குலத்தாரினும்
உன்னவர் எனக்கொள்...

அனாதையாயினும் உன்
தாயினைப்போல் எண்
ஆதரவற்றவராயினும் உன்
அன்புக்குழந்தைகள்போல் எண்...

பிணியுடையோரைக் கண்டால்
பணிச்செய்ய ஓடு
ஊனமுற்றோரைக் கண்டால்
ஊன்றுக்கோலாய் மாறு...

இன்னும் இன்னும்
பிடிவாதமேன்
தேவையில்லா
மதவாதாமேன்...

திருந்திட வேண்டுகிறேன்
மனப்புண்ணுக்கு மருந்திட வேண்டுகிறேன்
மாறினால் நீ மனிதன்
இல்லையேல் தொடரும் சனிதான்...!

எழுதியவர் : muhammadghouse (3-Nov-13, 1:09 am)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 163

மேலே