ஈழம் என்னும் நிலம் மறந்தோம்

ஈழம் என்னும் நிலம் மறந்தோம்
அங்கு வாழும் எம்
இனம் துறந்தோம்
நட்ட மரத்திற்கு நம் கையால்
நஞ்சு வார்த்தோம் - பிஞ்சு இலையும்
சுட்டுக் கருக
விட்டுப் பார்த்தோம்.
பாராளுமன்ற பந்தியில்
ஜனநாயகத்தை பணநாயகமாய் கண்ட
பதர்களை கொண்டே
அரசியல் பிழைப்பு செய்தோம்

தாய் முலைப் பாலில்
தன்மானம் குடித்து
தமிழ் மொழி மடியில்
தமிழ் ஊரக் கேட்டு
விடுதலை வேட்டை செய்த புலியடா
ஈழவன் தமிழ் இனத்தின் பெருமையடா

ஓர் இனத்தின் விடுதலை என்ற
விடயத்தை சொன்னவர்கள்
விளையாட்டாய் கூட
எண்ணியிருக்க மாட்டார்கள் - இது
இனத்தின் படுகொலைக்கு வித்திடும் என...
எங்கள் தேசம் எங்களுக்குச் சொந்தம்
என்ற சொல்லுக்கு எம்
சொந்தங்களுக்கு கொள்ளி வைக்கும்
நிலை எதற்கு?

சமஉரிமையை சண்டையிட்டால் தான்
கொண்டு தருவீர்கள் என்ற நிலை வந்த பின்
கோடி ஆட்டி கோஷம் போட
எங்களுக்கு நேரம் இல்லை
மண்டியிட்டு உன்னிடம் கேட்க - இது
உனக்கு உன் அன்னை வீட்டு சீதனம் அல்ல
அண்டை நாடு எழுதித் தந்த சாசனம்
எங்கள் மண்ணில்
மங்கையரின் மானம்
மரணத்தை தழுவும் நிலை வந்த பின்
இதை பொறுத்துக்கொள்ள - நாங்கள்
பொருத்தமானவர்கள் அல்ல...
வீரம் என்பதின் அறம் - எங்கள்
இனம் பெற்ற வரம் - எங்கள்
இனத்தின் பெருமையை
ஒருகாலும் உன் போன்ற
மானம் இழந்த
மதி மறந்த மன்றத்தில்
மறந்தும் இறக்கி வைக்க மாட்டோம்...

மண்ணில் சாய்ந்து கிடக்கும்
மறவர்களை தாங்கி அழும்
நிலத்தின் அழு குரல்
என்னை நிலைகுலையச் செய்கிறது...
வலையை விரித்து பிடிக்க
இவர்கள் நரிகள் கூட்டம் அல்ல
எங்கள் குடியை அறுக்க வந்த
நயவஞ்சகர்கள் கூட்டம் - இவர்களுக்கு
இல்லை இனி மனித சட்டம்
எங்கள் விருப்பம் செய்ய
இவர்களுக்கு எதற்கு விளக்கம்
அமையும் விடிந்த
சிங்களக் கறை மறைந்த
எங்கள் தாயகம் .....

எழுதியவர் : (4-Nov-13, 5:41 am)
பார்வை : 221

மேலே