விடுதலை

விடுதலை என்பது
வீரியத்தின் விளை நிலம்
வீரர்களின் தலைநகரம் - இது
வீதிகள் தோறும் எளிதில் கிடைக்காது
விதியை நினைந்து விம்மி கொண்டு
மதியை புதைக்க முடியாதது
ஜாதிகள் பார்த்து சேர்ந்து கொள்ளாது
வியாதியாக பரவியும் வந்து விடாது
அநீதியை ஒருநாளும் அணைத்துக் கொள்ளாது - இது
இன மான உணர்வுகளின் உயிர் களம்
இது இருக்கும் இதயத்தை
இருட்டில் இருத்தி வைக்கவும் முடியாது - இது
ஆளுமை இல்லாத தோழமை வாழ்வை விரும்புவது....

எழுதியவர் : (4-Nov-13, 5:42 am)
Tanglish : viduthalai
பார்வை : 822

மேலே