வேடிக்கை உலகம்

அடர்ந்த‌ வனத்தினில் இருள் நேரப்

பயணமாய் வாழ்க்கை_ அதன்

அழகும், ஆபத்தும் அருகில் இருப்பினும்

அனுபவத்தால் அறிந்தாக‌ வேண்டும்.......



கண்களை கட்டிய பயணம் ஆயினும்

இலக்கை நோக்கி குருட்டுப் பயணம்......

இலக்கை அடைய‌ இடறி விழுதல்

எத்தனை முறையே எண்ணிக்கை அறிந்திலோம்......



மறைத்து வைத்த‌ மரணபயம் மனம்

அறிந்தும் அறியாதது போல் மாயையாய்

வாழ்க்கை....... எதுவும் நிலையில்லை

என்பது நியதியாயினும் பற்றுதல் இன்றி

வாழ்ந்திடல் சாத்தியமோ?.......



மனம் பறவையாய் பறக்கும் போதெல்லாம்

அறிவெனும் ஆயுதம் கொண்டு அடக்கிடல்

வேண்டுமோ?..... அறிவின் ஆயுதம் கூர்மை

ஆயினும் கீறிக் கொள்ளும் குழந்தையோ மனம்.....



சட்டை மாற்றி சாகசம் செய்திடும்

சர்க்கஷ்காரணாய் உள்ளுக்குள்

ஒளித்துக் கொண்டு உடைமாற்றிடும்

வேசமோ வாழ்க்கை.....?



சிறு காற்றுக்கும் வளைந்த‌ போதும்

புயல் காற்றிக்கும் முறிந்து போகா

நாணலோ வாழ்க்கை..... ஆலமாய் வாழந்திட‌

முடியாத‌ போது நாணலாய் வாழ்க்கை....



பாதைகள் மாறியே போய்விடினும்

பயணங்கள் முற்றுப் பெறுவதில்லை....

எதை நோக்கி என‌ தெரியாத‌ போதும்

இலக்கின்றி இன்னமும் பயணம்......

எழுதியவர் : கனகீஷ் (5-Nov-13, 3:27 pm)
சேர்த்தது : kanageesh
Tanglish : vedikkai ulakam
பார்வை : 79

மேலே