பழமை என்றால் சிறுமையோ
வாடி
விழுந்த மலரொண்டின்
சோகக்கதை கேளீர்
வாடி விழுந்தது என் குற்றமா ..?
தாங்கி வைத்திருந்த காம்பு
தள்ளி விட்டது குற்றமா ...?
இளமையாக இருந்த போது
உவமைக்கு என்னை
பயன்படுத்திய -கவிஞரே
பதில் கூறுங்கள் .....!!!
தேய்ந்து
அறுந்த செருப்பொன்றின்
சோகக்கதை கேளீர்
தேய்ந்தது என் குற்றமா ..?
தேய்த்தவர் கால் குற்றமா ...?
என் சோடியை இழந்த நான்
தெருவோரத்தில்
வீசப்பட்டுள்ளேன் -தவிக்கும்
என் மனசை யாரறிவார்
பராபரமே ....!!!
கிழிந்த சட்டையின்
சோகக்கதை கேளீர்
கிழிந்தது என் குற்றமா ...?
கிழிக்க வைத்த உடலின்
வியர்வை குற்றமா ...?
உடலுக்கு அழகுசெய்த
என் வாழ்க்கை இப்போ
துடைப்பு துணியாக
மாறிவிட்ட என் வாழ்க்கை ...!!!
பழமையானால் பாராமுகம்
காட்டும் எம் சமுதாய
பாரம் பரியம் -இதில் மட்டும்
பழமை பேணும் கோட்பாட்டை
காலத்தால் கடைப்பிடிப்பது
விந்தையிலும் விந்தைதான் ...!!!