வெங்காயத்தால் ஒரு காயம்

வெங்காயம் ! பார்த்தால் கண் எரியும் ,
எரிகிறது வயிறு விலையை கேட்டால் !

பழைய சோத்துக்கு வெங்காயம் என்பர் ,
உயரிய பழங்களையும் தாண்டிச் சென்றது
வெங்காயம் !

ஏழை கடித்து கொள்ள வெங்காயம் ,
அந்தகாலம் !
மணி பர்சை !கடிக்கிறது வெங்காயம் ,
இந்தகாலம் !

மண்ணில் இருந்த வெங்காயமே ,
மக்கள் மனதில் இன்று, நீ
ஒரு காயமே !

எழுதியவர் : சாய் பிரகாஷ் (5-Nov-13, 6:05 pm)
சேர்த்தது : saiprakash
பார்வை : 132

மேலே