பால் மரக் காட்டினிலே

சொர்ண பூமியில்
ரப்பரும், செம்பனையும்
நிறைந்த தோட்டங்களில்
வாழ்ந்த இந்தியனே !

மண்ணுக்கு நல்கினாய்
உடலையும் உயிரையும்
வெயிலிலும் மழை யிலும்
பாடுபட்டாய் இந்தியனே!

நாட்டுக்கரா னாகி விடுகிறான்
மலாய்க் காரன் சலுகைகளும்
உரிமைகளும் செழிப்பும்
மித மிஞ்சி அடைகிறான்.

வியாபாரமும் விநியோகமும்
படிப்பும் முன்னேறமும்
சீனனை உயர்த்த
ஏற்றம் கண்டுள்ளான்.

உழைப்பைத் தவிர ஏதும் தெரியாத
கல்வியும் விருத்திக்காமல்
வாழ்கிற இந்தியனோ இ ன்று
நிலையிழந்து விட்டான்


தோட்டங்கள் சுருங்க துயரங்கள் தொடர
வேலையிழந்து திருடு கொலை
என்ற வன்முறைகளைப் பழகி
துச்சமாக மதிக்கப்படுகிறான்

மலாயா நாடு முற்றிலும் மறந்த்தது
வளத்திற்கு காராணமான இந்தியனை
நினைக்கவில்லை எள்ளளவும் அவனை
சோபையிழந்து நிற்கிறான்.


தாய் நாடே தெரியாது வாழ்ந்து
அண்டிய நாட்டில் தள்ளி வைக்கப்பட
இந்தியன் எங்கே செல்வான் வாழ்விற்கு
எப்படி வாழ்வான் செம்மையாக ?

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (5-Nov-13, 10:51 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 194

மேலே