எமை ஏன் படைத்தாய்

இறைவா எமை ஏன்
நீ படைத்தாய்....?
இரவாப் பகலாய்
ஏன் வதைத்தாய்....?

உனையே நினைத்தோம்
தீரவில்லை-துன்பம்
தினமும்...தினமும்
வாட்டுதெம்மை...!

துன்பம் என்றுனை
அழைத்துநின்றோம்-நீயும் ஓடி ஒழித்து
மறைவதென்ன..?

இன்பம் எமக்கு தேவையில்லை
தொடரும் துன்பம் தாங்க
முடியவில்லை...!

மரணம் துரத்தும் பொழுதுகளாய்...
மனதை வருத்தும் கனவுகளாய்...
உயிர்கள் படைத்தோம் தீரவில்லை
எங்கள் உரிமை கிடைத்திட
வழியுமில்லை...?
இறைவா....இறைவா என்ன செய்வோம்
எமை நீ வெறுத்தால் எங்கு செல்வோம்..?

உலகில் எமைக்காக்க எவருமில்லை
உனது விழியேன் திறக்கவில்லை
கருணை உள்ளவர் கடவுளென்பார்...!
கல்லால் ஆனதோ உனது உள்ளம்...?

மீண்டும்..மீண்டும் வருத்தாதே....
எமைச் சீண்டித் தினம் நீ சிரிக்காதே...!
வெந்த புண்ணாய் எமது நெஞ்சம்-நீயும் வேலைப் பாய்சி ரசிக்காதே....!

எழுதியவர் : புஸ்பராசன் (6-Nov-13, 12:55 pm)
Tanglish : emai aen padaithaai
பார்வை : 59

மேலே