நீ என் காதல் மனைவி
உனக்கு,
அருகில் இருந்து ஆறுதல்,
சொல்லவில்லை,
தொலைவில் இருந்து,
தொல்லைகள் மட்டும்,
தருகிறேன்!
சாப்பிட்டியா என்ற,
சம்பிரதாய வார்த்தை,
மட்டும்,
கேட்டு,
நீ சாப்பிடாமல் இருக்கும்,
பல நாட்களுக்கு,
நானே காரணம்,
ஆகிறேன்!
உன் சிரிப்பு,
அழகை,
ரசிக்க தெரியாமல்,
உன்னை அழ வைத்து,
பார்க்கிறேன்!
நீ செய்தால்,
அது தவறு,
நான் செய்தால்,
அது சரி!
உன்னை பிடிக்கும் என்பதை,
உன்னிடம் சொன்னதை விட,
உன்னை பிடிக்காது என்று,
சொல்லியே உன்னை,
வேதனை படுத்தி இருக்கிறேன்!
சத்தமாய் பேசாத,
உன்னிடம்,
சத்தம் மட்டுமே,
போட்டு பேசுகிறேன்!
நீ இல்லை என்றால்,
நான் இல்லை!
உண்மையாய் உன்னை,
நேசிப்பதை ஒரு நாள்,
கூட,
உன்னிடம் வெளி படுத்த வில்லை!
என் தாய்க்கு பின்,
நீ தான்!!!