கவிதைக்கு வறுமை இல்லை

திறந்து வைத்த
மண் பானைக்குள்
நிலவொளி.....!

ஆஹா
அருமையான நிலாச்சோறு...
என
ரசித்தபோதும்
அழுகை வந்தது
ஏழைக்கு.....

பாவம்
பசி வயிற்றைக் கிள்ளியது......!

எனினும்
சிரிக்க முயன்றான்

கனவிலாவது நான் செல்வந்தனாக இருக்கிறேனே..

ஐயா தருமம் போடுங்க சாமி....

எங்கோ வெகு தொலைவில் கேட்கும்
சக தோழனின் குரல்....

பவுர்ணமி இரவில் குயிலோசையாய்......

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (8-Nov-13, 3:04 pm)
பார்வை : 111

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே