இயற்கையின் பரிமாற்றம்

வெயிலுக்கு சாம்பல் நிறம்
பூசப்பட்டிருக்கிறது
நீண்ட நாள் பிரிவில்
மேகம் கண்ணீரை சிந்தியது.

புல் சிரித்தது,
புள் ஒழிந்தது,

காற்று கரைந்து வீட்டிற்குள் ஒழுகியது
வெப்பத்திற்கு விலை
கொடுத்தது ஒரு குட்டிப்பூனை.

தன் உடலுக்குள் ஒரு வயதை
மாத்திரம் நிரப்பிய
என் மகளை போர்வைக்குள்
அனுப்பியது ஈரக்காற்று.

வீட்டினுள் சில பாத்திரங்கள்
தன் வாயை திறந்து கொண்டிருக்கிறது
பாத்திரத்தின் வயிற்றுக்குள்
சொட்டுச் சொட்டாய் நீர்த்துளியை
விட்டது கூரை ,,,

குடைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார் வாப்பா,,,,,

எழுதியவர் : இர்பான் ahmed (8-Nov-13, 10:38 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 99

மேலே